Kalaikkalakam-Sport

Montag, 7. Juni 2010

World_Cup - Fussball - 2010

தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கும் 19 வது 

உலகக்கிண்ண கால்பந்துப் போட்டிகள் ஜூன் 11ம் 

திகதி முதல் ஜூலை 11 ம் திகதி வரை நடைபெற

உள்ளன. 1930 ம்ஆண்டு முதன் முறையாக உலகக்

கிண்ண கால்பந்துப்போட்டிகள் நடந்தது. அன்று 

முதல்4ஆண்டுகளுக்கு ஒருமுறை 18 உலகக்கிண்ண 

போட்டிகள் இது வரையில் நடைபெற்றுள்ளன. 

இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942,1946 ஆண்டு

களில் இப்போட்டிகள் நடத்தப்படவில்லை போட்டிக

ளில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். போட்டியை 

நடத்தும் நாடு தவிர மற்ற 31 அணிகள் தகுதிச் சுற்று 

ஆட்டங்கள் மூலம் உலகக் கிண்ண கால் பந்து இறுதிப்

போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டிகள் தொடர்ந்து 

3 ஆண்டுகளாக நடைபெறும். 4ஆவது ஆண்டு முடிவில் 

போட்டிக்கு தகுதிபெற்ற அணிகள் உலகக்கிண்ண 

போட்டியில் விளையாடும்.இதுவரை நடந்த 18போட்டி

களில் 7 நாடுகள்தான் திரும்பத்திரும்ப பீபா கிண்ணத் 

தைவென்றுள்ளன. கால்பந்தின் தொட்டில் என்று 

அழைக்கப்படும் பிரேசில் அதிகபட்சமாக 5 முறை 

சம்பியனாகியுள்ளது.நடப்புச் சாம்பியனான இத்தாலி 

4 முறையை சம்பியனாகவும், அடுத்த இடத்தில்

ஜேர்மனி 3முறை சம்பியான் பட்டத்தையும் வென்று
உள்ளது. உருகுவே, ஆர்ஜென்டினாஅணிகள் தலா 2 
முறையும், இங்கிலாந்து,பிரான்ஸ் அணிகள் தலா ஒரு 
முறையும்பீபா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.இது
வரை 76 நாடுகள் ஒவ்வொரு முறையேனும் உலகக் 
போட்டிகளில் பங்கேற்றுள்ளன. 2006 இல் ஜேர்மனியில் 
நடந்த உலகக்கிண்ண போட்டியை சுமார் 71.51கோடி 
மக்கள் தொலைக்காட்சியிலும்,நேரிலும் கண்டுகளித்து
உள்ளனர். 2010 க்குஅடுத்தபடியாக 2014இல் பிரேசிலில்
போட்டி நடைபெறவுள்ளது. உலகிலுள்ள விளையாட்டு
க்களில் அதிகளவு மக்களால்பார்க்கப்படும் பட்டியலில் 
முதலாவதுஇடத்தில் பீபா உலகக்கிண்ண கால்பந்து
போட்டிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Keine Kommentare: